மூன்றாம் பிறை
எந்த தெய்வத்தையும் அதன் உண்மை சொரூபத்தை காண்பது என்பது அரிது. அதுவும் இந்த கலியில் தெய்வ தரிசனம் நடக்கவே நடக்காத ஒன்று. ஆனால், இதில் ஒருவருக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. அது யாரெனில், அன்பும், கருணையும் உருவான சாட்சாத் மகாதேவர். கருணாமூர்த்தியான அந்த சிவனை மட்டும் நம் கண்களாலேயே தரிசிக்க இயலும். அது எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த புராண கதையை பார்த்து விட்டு வருவோம். தட்சன் - பிரஜாபதிகளுள் ஒருவர். பிரஜாபதிகள் பிரம்மதேவனின் புத்திரர்கள். படைப்புத் தொழிலில் உதவி புரிவதற்காக பிரம்மனால் படைக்கப்பட்டவர்கள். சந்திரன் - பிரஜாபதிகளுள் ஒருவரான அத்திரி மகரிஷிக்கும், தேவி அனுசியாவிற்க்கும் பிறந்த புத்திரர்களுள் ஒருவர். குரு பிரகஸ்பதியிடம் சகல கலைகளையும் கற்றவர். தட்சனுக்கு பிறந்த 27 நட்சத்திரங்களான 27 பெண்களையும், தட்சன் சந்திரனுக்கு மணமுடித்து வைத்தார். 27 பெண்களில், ரோஹிணி மீது மட்டும் அதிகம் ஈடுபாடும், மற்ற மனைவிகளை கண்டு கொள்ளாமலும் இருக்கவே, தங்கள் தந்தையிடம் சென்று 26 பெண்களும் முறையிட்டனர். கோபமுற்ற தட்சனோ, தன் பெண்களை வேதனைப்படுத்திய குற்றத்திற்காக அவனுடைய கலைகள் ஒவ்வொன...