பாகீரதி - பாகம் 3 : திக்கற்ற இருளில் சிறு வெளிச்சம் ( A Spark in the Darkness )


சூர்ய வம்சம். சூர்ய பகவானிடம் இருந்து தொடங்கிய வம்சம் ஆதலால் சூர்ய வம்சம் என்றும், அவ்வம்சத்தில் தோன்றிய, சூர்ய பகவானின் பேரனும், சூர்ய பகவானின் மூத்த மகனான வைவஸ்தவ மனுவின் மகனுமாகிய இக்ஷ்வாகுவின் பெயரால் இக்ஷ்வாகு குலம் என்றும், அக்குலத்தில் தோன்றிய பெரும் புகழுக்குரியவரான ரகு மன்னரின் பெயரால் ரகு வம்சம் என்றும் அழைக்கப்படும் ஒரு பெருமை வாய்ந்த வம்சம். இந்த வம்சத்திற்கு முத்தாய்ப்பு என்றால் அது ஶ்ரீ ராமர் இக்குலத்தில் அவதரித்தது தான். இப்பேற்றினை பெற்ற இந்த வம்சத்தில் தோன்றியவர் தான், பகீரதன். சூர்ய வம்ச தோன்றல்களில் மிகச்சிறப்பு வாய்ந்த மன்னர்களில் ஒருவர்.
இவர் ராமரின் முன்னோராகிய சகரன் என்னும் மன்னனின் பேரன் அன்சுமான் என்பவரின் பேரன். இன்னும் சுருக்கமாக சொன்னால், எள்ளுபேரன். 
மன்னர் சகரனுக்கு இரு மனைவியர்.
கேசினி, சுமதி. இதில் கேசினிக்குப் பிறந்தவர் அசமஞ்சன் மற்றும் சுமதிக்கு,
தன் தவத்தின் பலனாக 60,000 பிள்ளைகள் பிறந்தனர். மன்னன் சகரனும் அசுவமேத யாகம் நடத்த எண்ணினார். 

அசுவமேத யாகம் நடத்தப்படுகிறது என்றால், யாகத்திற்கான ஆரோக்கியமான, தகுதியுள்ள, இலட்சணங்கள் பொருந்திய, வெள்ளை நிறக் குதிரை தேர்வு செய்யப்படும். அதன் நெற்றியில், யாகம் நடத்தவிருக்கும் மன்னனின் பெயரும், அந்நாட்டு பெருமையையும் குறிக்கும் பட்டயம் கட்டப்பட்டு, ஒரு வருட காலம் அது நாட்டின் எந்த திசையில் வேண்டுமானாலும் சுதந்திரமாக செல்ல விடுவிக்கப்படும். குதிரையை தொடர்ந்து மன்னரின் படையும், மன்னரின் வாரிசுகளும் செல்வார்கள். குதிரை எந்தெந்த நாட்டின் எல்லைக்குள் நுழைகிறதோ அந்த நாடு, யாகம் செய்யும் மன்னனின் மேலாதிக்கத்தை ஏற்க வேண்டும். மறுத்தாலோ அல்லது குதிரையை சிறைபிடித்தாலோ யாகம் செய்யும் மன்னரிடம் போரிட்டு வெல்ல வேண்டும். யாகம் செய்யும் மன்னன் போரில் வென்றால் தான் யாகக் குதிரையை நாட்டுக்கு அழைத்து வந்து யாகத்தை நிறைவு செய்ய இயலும். ஒரு வருடத்தின் முடிவில், குதிரை எந்த நாட்டிலும் தடுக்கப்படாமல் மீண்டும் நாட்டிற்குத் திரும்பினால் அதன் பின், அந்த மன்னன் மன்னர்களுக்கெல்லாம் மன்னன்,   சக்கரவர்த்தி என்று போற்றப்படுவார். பின்பு யாகம் நடத்தப்பட்டு, தானங்கள் வழங்கி அசுவமேத யாகம் நிறைவுபெறும்.

வெற்றிகரமாக 99 யாகங்களை நடத்தி முடித்த பின்பு, 100 ஆவது யாகத்தை நடத்த சகரன் ஆயத்தமானார். 100 அசுவமேத யாகம், இந்திரனின் பதவியை பெற்றுத்தரும். தன் பதவியை காப்பாற்றிக்கொள்ள எண்ணிய இந்திரதேவன், 100 ஆவது யாகத்திற்காக அனுப்பட்ட குதிரையை திருடிக்கொண்டு போய், பாதாள லோகத்தில் தவம் புரிந்து கொண்டிருந்த கபிலமுனிவரின் ஆசிரமத்தில் கட்டி வைத்து விட்டார். குதிரையை பின் தொடர்ந்து சென்ற சகரனின் 60000 மகன்களின், ஒரு கண கவனச்சிதறலை பயன்படுத்திக் கொண்டு கண் இமைக்கும் நொடிப்பொழுதில் குதிரையை அபகரித்து விட்டார். 

60000 பேரும் குதிரையைத் தேடி அலைந்தார்கள். பாதாள லோகம் வரை சென்று தேடித் தீர்த்தார்கள். இறுதியாக கபிலரின் ஆசிரமத்தில் கட்டியிருந்த குதிரையைக் கண்டுபிடித்தார்கள். அசுவத்தை திருடி வந்தது கபிலர் தான் என்று எண்ணி முனிவரைக் கடும் வார்த்தைகளால் அவமதித்தார்கள். அதுவரை எவ்வித சப்தமும் இல்லாமல், தன் தவத்திற்கு ஏற்றதாய் இருந்த அந்த சூழலில், இவர்களின் கூச்சல் அடர்த்தியை ஏற்படுத்தியது. அது, நடந்து கொண்டிருப்பதை அறியாமல், ஆழ்ந்த தவத்தில் இருந்த முனிவரின் அந்தர் ஆத்மாவில் சிறு சலனத்தை ஏற்படுத்தியது. தன் தவத்திற்கு இடையூறு ஏற்பட்டிருப்பதை உணர்ந்த முனிவரின் அந்தர் ஆத்மா அந்த கோபத்தை ம்ம் என்ற சிறு சப்தமாக வெளிவிட்டது. அவ்வளவே தான். அடுத்த கணமே சகரனின் 60000 பிள்ளைகளும் எரிந்து சாம்பலானார்கள். 
சாபவிமோசனம் அற்ற நிலைக்கு 60000 பேரும் தள்ளப்பட்டார்கள். அவர்களின் ஆத்மாக்கள் தாகத்தால் துடித்தன. காணாமல் போன குதிரையையும், தன் 60000 மகன்களையும் தேடி அலைந்து, பின் நடந்தவற்றை அறிந்த சகரனும், அவரின் முதல் மனைவியின் வழிவந்த பேரனான அன்சுமான் என்பவரும் கபிலரிடம் மன்னிப்பு வேண்டிப் பணிந்தார்கள். ஆனால் பலனின்றி குதிரையை மட்டும் அழைத்துக் கொண்டு போய் யாகத்தை நிறைவு செய்தார்கள். 

100 அசுமேத யாகங்கள் செய்தும் சகரனுக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் இல்லை. தன் மகனான அசமஞ்சன் நல்வழியில் செல்லாது தீயவழிக்கு சென்று விட்ட காரணத்தினால், மகனை நாட்டை விட்டு வெளியேற்றிய சகரன், இராஜ்ஜியத்தை பேரனான அன்சுமானிடம் ஒப்படைத்தார். அன்சுமானின் மகன் திலீபன். அவரின் மகன் பகீரதன். தலைமுறை தலைமுறையாக தம் முன்னோர்கள் பெற்ற சாபத்திற்கு விமோசனம் இல்லையென்று நம்பிக்கையிழந்திருந்த நிலையில், பகீரதன் மன்னனான பின்பு, தன் முன்னோர்களின் சாபம் தீர வழி தேட ஆரம்பித்தான். எப்படியேனும் தன் முன்னோர்களின் சாபம் தீர்ந்து, அவர்கள் விமோசனம் பெற வழியை கண்டுபிடித்தாக வேண்டும் என்பதே அவனின் உறுதியான எண்ணம். தன் முன்னோர்களின் ஆத்மாக்கள் தாகம், தாகம்,... என்று அலறும் அலறலை அவனால் உணர முடிந்தது. அவனது ஆட்சியில் நாடும், நாட்டின் குடிகளும் செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தும் கூட, பகீரதன் மனது அமைதியின்றி தவித்தது.

பகீரதனுக்கு சாபம் தீர வழி கிடைத்ததா? என்பதை அடுத்த பதிவில் காணலாம். 

சண்முகப்ரியா K சம்பத்குமார் 
 

The Solar Dynasty — since it originated from Lord Surya, it came to be known as the Surya Vamsa. It is also called the Ikshvaku lineage, named after Ikshvaku, the grandson of Lord Surya and the son of Vaivasvata Manu, the eldest son of Surya. Later, it came to be known as the Raghu dynasty, after the renowned King Raghu who was born in this lineage. The greatest glory of this dynasty was the incarnation of Lord Sri Rama in it.

It was in this illustrious lineage that Bhagiratha was born — one of the most distinguished kings of the Solar dynasty. He was the great-grandson of King Sagara, who was an ancestor of Lord Rama. To put it more simply, he was Sagara’s great-great-grandson.

King Sagara had two wives — Kesini and Sumati. Kesini gave birth to a son named Asamanja, while Sumati, through the power of her penance, gave birth to 60,000 sons. King Sagara decided to perform the Ashwamedha Yajna.

When an Ashwamedha Yajna is conducted, a healthy, auspicious, and qualified white horse is selected. A royal inscription bearing the king’s name and the glory of the kingdom is tied to the horse’s forehead. The horse is then allowed to roam freely in any direction for one year. The king’s army and heirs follow the horse. Any kingdom the horse enters must accept the supremacy of the king performing the yajna. If they refuse or capture the horse, they must defeat the king in battle. Only if the king wins the battle can he bring back the horse and complete the yajna.

If the horse returns after a year without being stopped, the king is hailed as the emperor of emperors — the Chakravarthi. The yajna is then completed with rituals and donations.

After successfully completing 99 yajnas, King Sagara prepared to conduct the 100th Ashwamedha Yajna. Completing 100 Ashwamedha yajnas would grant the position of Indra. Wanting to protect his throne, Indra stole the horse meant for the 100th yajna and tied it near the hermitage of Sage Kapila, who was performing penance in the netherworld.

Taking advantage of a momentary distraction among Sagara’s 60,000 sons, Indra stole the horse in the blink of an eye. The 60,000 sons searched everywhere for the horse, even going down to the netherworld. Finally, they found the horse tied at Sage Kapila’s hermitage.

Assuming that Sage Kapila had stolen the horse, they insulted him harshly. Until then, the surroundings had been perfectly silent, suitable for the sage’s deep meditation. Their loud accusations disturbed the peaceful atmosphere. Though the sage was deep in meditation and unaware of the events, this disturbance caused a slight movement in his inner consciousness.

Realizing that his penance had been disturbed, a small breath escaped from the sage. That was enough. In the next moment, all 60,000 sons of Sagara were reduced to ashes.

They were left without liberation, and their souls suffered in thirst. King Sagara, who was searching for both the missing horse and his sons, eventually learned what had happened. He and his grandson Anshuman (born through his first wife’s lineage) begged Sage Kapila for forgiveness. However, they could only retrieve the horse and complete the yajna, but the curse remained unresolved.

Even after completing 100 Ashwamedha yajnas, Sagara had no peace or happiness. Since his son Asamanja had strayed into evil ways, Sagara exiled him and handed over the kingdom to his grandson Anshuman. Anshuman’s son was Dilipa, and his son was Bhagiratha.

For generations, hope had faded that their ancestors would be freed from the curse. After becoming king, Bhagiratha began searching for a way to liberate his ancestors. He was determined to find a solution at any cost. He could almost hear the cries of his ancestors’ souls, tormented by thirst.

Though his kingdom prospered and his people lived happily under his rule, Bhagiratha’s mind remained restless and troubled.

Did Bhagiratha find a way to break the curse?
We shall see in the next part.



Comments

Post a Comment

Popular posts from this blog

பாகீரதி - பாகம் 1 : நீர் என்னும் அமிழ்தம் (The Nectar)

மூன்றாம் பிறை (The Crescent)

கந்தர் அலங்காரம் (காப்பு) : மூத்தோன்