ஞானப்பழம்
அனைவருக்கும் வணக்கம். நம்மில் அநேகமானோர் திருவிளையாடல் படத்தைப் பார்த்திருப்போம். அதில் திரு.கண்ணதாசன் அவர்கள் இயற்றிய 'ஞானப்பழத்தைப் பிழிந்து' என்கிற பாடல் வரும்பொழுது, வரிகளின் அர்த்தம் தெரியாமல், உளறிய படியே பாடிக்கொண்டு இருப்பது தான் எப்பொழுதும் வழக்கம். அப்பாடலில் பல வரிகள் தெளிவாகப் புரிந்தாலும் முதலில் வரும் சில வரிகள் எனக்கு புரிந்ததே இல்லை. ஞானப்பழத்தைத் தனக்குத் தரவில்லை என்று கோபித்துக்கொண்டு, தன் தாய்தந்தையை நீங்கிச் செல்லும், அழகிய கோபப் பழமான முருகப்பெருமானை, அவ்வை சமாதானப்படுத்த முயலும்படி அமைந்த பாடல் தான் அது. இன்று அதன் அர்த்தம் என்னவாக இருக்கும்? அதை தெரிந்து கொள்ளவேண்டும் என்று மனம் ஆசைகொண்டது. அவ்வரிகளை தேடிப் படித்தபொழுது மனம் இன்னும் குதூகலித்தது. இறைவனை இதைவிட அழகாக புகழ்ந்து விட முடியுமா என்று ஆச்சர்யமும், ஆனந்தமும் ஏற்பட்டது. உங்களுக்கும் அந்த இன்ப உணர்வு நிச்சயம் துளிர்க்கும். அந்த வரிகள் இதோ., முருகா! நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ! உனக்கென்ன விதமிக...