கந்தர் அலங்காரம் (பாடல் 6) : பரமானந்தம்


பெரும் பைம் புனத்தினுள் சிறு ஏனல் காக்கின்ற பேதை கொங்கை

விரும்பும் குமரனை மெய் அன்பினால் மெல்லமெல்ல உள்ள

அரும்பும் தனி பரம ஆநந்தம் தித்தித்து அறிந்த அன்றே

கரும்பும் துவர்த்து செம் தேனும் புளித்து அறக் கைத்ததுவே.


பசுமையான பெரும் தினைப்புனம். அதில் ஒரு சிறு கொல்லையை காவல் செய்து கொண்டிருக்கிறாள் வள்ளிக்குறத்தி. அந்தப் பேதை பெண்ணை விரும்பும் இளங்குமரன், உன்னை உள்ளத்தால்  நினைக்க நினைக்க, உன் மீது அன்பு பெருகுகிறது. அந்த அன்பு பெருகி,  பரமானந்தம் அரும்புகிறது. அதன் இனிமையை அனுபவிக்கும் என் உள்ளத்திற்கு கரும்பு துவர்க்கிறது! தேனும் புளித்துக் கசக்கிறது!

பிரபஞ்சம் என்னும் பெரும்புனத்தில் உள்ள சிறு கொல்லைதான் இவ்வுலகம். பேதை என்பது  பெண்பருவங்கள் ஏழில் முதல் பருவம். ஏதுமறியா அறியாமைப் பருவம். வள்ளி என்னும் பேதை தான் அறியாமையில் மூழ்கியிருக்கும் ஜீவாத்மாக்களாகிய நாம். அந்த ஜீவாத்மாவை விரும்பும் பரமாத்மாவே முருகப்பெருமான். என்று நாம் பரமாத்மாவை உணர்ந்து, நாமும் உள்ளம் உருகுகிறோமோ, அன்று தேனையையும் கரும்பையும் போல இனித்துக்கொண்டிருக்கும் இந்த உலக சிற்றின்பங்கள் தானாகவே கசந்து விடும். 

அடுத்த பதிவில் சிந்திப்போம்.

சண்முகப்ரியா K சம்பத்குமார் 

For english, please visit the link given below👇

https://thedivinestoriez.blogspot.com/2026/05/kandhar-alangaram-divine-spell-6-divine.html


Comments

Popular posts from this blog

பாகீரதி - பாகம் 1 : நீர் என்னும் அமிழ்தம் (The Nectar)

மூன்றாம் பிறை (The Crescent)

கந்தர் அலங்காரம் (காப்பு) : மூத்தோன்